மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன்வளர்ப்பு, நீர்வாழ் உயிரின மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவதற்காக கடந்த மூன்றாண்டுகளில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.2,208.74 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 22 JUL 2026 1:36PM by PIB Chennai

நாட்டில் மீன்வளர்ப்பு, நீர்வாழ் உயிரின மேம்பாட்டிற்காக மீன்வளத்துறை பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 2015-16-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகாலம் ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு மேம்பாடு மற்றும் மேலாண்மை திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது.  2018-19-ம் ஆண்டு முதல் மீன்வளர்ப்பு, கடல்வாழ் உயிரின உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி அமல்படுத்தப்பட்டது, பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் மீன்வளர்ப்பு விவசாயி நலத்திட்டம் ஆகியவை அமல்படுத்தப்படுகிறது. 

அத்துடன் மத்திய அரசு 2018-19-ம் ஆண்டு முதல் வேளாண் கடன் அட்டை வசதியை மீனவர்களுக்கும், மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கும் அவர்களுடைய செயலாக்க மூலதன தேவையின் அடிப்படையில் விரிவுபடுத்தியுள்ளது.  பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,885.18 கோடி மதிப்பிலான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.3,159.83 கோடியாகும்.  பல்வேறு மீன்வளர்ப்பு, நீர்வாழ் உயிரின மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவதற்காக கடந்த மூன்றாண்டுகளில் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.2,208.74 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287594&reg=3&lang=1

****

TV/IR/SU/SH


(रिलीज़ आईडी: 2287937) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी