நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
ஓய்வூதியம் தொடர்பான குறைகளைத் தீர்க்க சிறப்பு முகாம்
प्रविष्टि तिथि:
22 JUL 2026 2:24PM by PIB Chennai
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 18 வரை புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் (S-61) 'சிறப்பு முகாம் 3.0'-வை நடத்துகிறது.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை ஜூலை 31, 2026 வரை (காலை 10 முதல் மாலை 5 மணி வரை) நேரிலோ அல்லது கூடுதல் செயலாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் அவர்களின் முகவரிக்குத் தபால் மூலமாகவோ அனுப்பலாம். பெயர், பதவி, PPO எண் அதாவது தனித்துவமான 12 இலக்க அடையாள எண், வங்கி விவரங்கள், ஓய்வு பெற்ற தேதி, முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அதிகாரப்பூர்வ உத்தரவு நகல் மற்றும் வங்கியின் கடைசி இரு பக்கக் கணக்குப் புத்தக நகலை இணைக்க வேண்டும்.
தொலைபேசி எண்: 011-23034743 அல்லது abhinav.99[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287615®=3&lang=1
***
TV/NB/KR
(रिलीज़ आईडी: 2287832)
आगंतुक पटल : 13