மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன் உற்பத்தி

प्रविष्टि तिथि: 21 JUL 2026 3:03PM by PIB Chennai

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை, நாட்டில் மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்புத் துறையின் முழுமையான வளர்ச்சிக்காக 2020-21 நிதியாண்டு முதல் 'பிரதமரின் மீன் வளத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட கடந்த ஆறு ஆண்டுகளில், நாட்டின் மீன் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. இத்திட்டக் காலத்தில், நாட்டின் மீன் உற்பத்தி 141.64 லட்சம் டன்களிலிருந்து (2019-20) 197.75 லட்சம் டன்களாக (2024-25) அதிகரித்துள்ளது.

இந்தத் திட்டம், பயனாளிகளை மையமாகக் கொண்ட நடவடிக்கைகளின் கீழ் பெண் பயனாளிகளுக்குத் திட்ட அலகின் செலவில் 60 சதவீதம் வரை அதிக நிதி உதவியை வழங்குவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்கிறது. இத்திட்டத்தின் கீழ், கடந்த ஆறு நிதியாண்டுகளில் (2020-21 முதல் 2025-26 வரை), பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 1,47,654 பெண் பயனாளிகளை உள்ளடக்கிய ரூ.4178.30 கோடி மதிப்பிலான மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286991&reg=3&lang=1

****

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2287501) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR