ஜவுளித்துறை அமைச்சகம்
பிரதமரின் ஆயுள் காப்பீடு, பிரதமரின் விபத்துக் காப்பீடுத் திட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 48,767 கைத்தறி நெசவாளர்கள், தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUL 2026 2:19PM by PIB Chennai
கைத்தறி நெசவாளர்கள் நலத்திட்டத்தின்கீழ், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றை மத்திய ஜவுளிகள் அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. இந்த காப்பீடு ஆண்டு அடிப்படையில் ஜூன் 1 முதல் மே 31 வரையிலான காலக்கட்டத்தை உடையதாகும்.
இத்திட்டத்தின் கீழ், 2025-26-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 48,767 கைத்தறி நெசவாளர்கள், தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.9.75 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரேட்டா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286966®=3&lang=1
****
TV/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2287498)
வருகையாளர் எண்ணிக்கை : 30