பிரதமர் அலுவலகம்
பிஎம்எஃப்எம்இ திட்டம் எவ்வாறு தொழில் நிறுவனங்களை முறைப்படுத்துகிறது, ஊரகப் பொருளாதாரங்களை வலுப்படுத்துகிறது என்பதை விளக்கும் மத்திய அமைச்சரின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
21 JUL 2026 3:09PM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் எழுதிய கட்டுரை ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறை, குறிப்பாகப் பெண்களிடையே, அடிமட்ட அளவில் தொழில்முனைவை ஊக்குவிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். மேலும், நிதி, தொழில்நுட்பம், பிராண்டிங் மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் பிரதமரின் நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம் (பிஎம்எஃப்எம்இ) எவ்வாறு நிறுவனங்களை முறைப்படுத்துகிறது என்பதையும், உள்ளூர் உற்பத்தியாளர்களை வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற்றி, கிராமப்புறப் பொருளாதாரங்களை வலுப்படுத்தி, தற்சார்பு இந்தியாவைக் கட்டமைக்கிறது என்பதையும் இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறை, குறிப்பாகப் பெண்களிடையே, அடிமட்ட அளவில் தொழில்முனைவை ஊக்குவிக்கிறது. மலிவு விலை நிதி, தொழில்நுட்பம், பிராண்டிங் மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் பிஎம்எஃப்எம்இ திட்டம் எவ்வாறு நிறுவனங்களை முறைப்படுத்துகிறது என்பதை மத்திய அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் @iChiragPaswan எடுத்துரைக்கிறார். இது உள்ளூர் உற்பத்தியாளர்களை வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற்றி, கிராமப்புறப் பொருளாதாரங்களை வலுப்படுத்தவும், தற்சார்பு இந்தியாவைக் கட்டியெழுப்பவும் உதவுகிறது.”
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2287494)
आगंतुक पटल : 7