மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மங்களூரு மீன்பிடித் துறைமுகம்

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUL 2026 3:09PM by PIB Chennai

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களை மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது. மங்களூரு மீன்பிடி துறைமுகத்தை நவீனமயமாக்கி தரம் உயர்த்தும் வகையில் 37.47 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு 22.48 கோடி ரூபாய் மத்திய அரசின் பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இத்துறைமுக மேம்பாட்டுத் திட்டங்களுடன் 2023-24 முதல் 2026-27 வரையிலான காலத்தில் கர்நாடக மாநிலத்தில் மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய அரசு 126.01 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இதனைத் தெரிவித்தார். மங்களூரு மீன்பிடித் துறைமுக திட்டப் பணிகள் தற்போது 25 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் 6.31 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் 1,600 மீன்பிடி படகுகள் நிறுத்தி வைப்பதற்கும், 18,000 மீனவர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் எஞ்சியப் பணிகள் 2027 மே 21-க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவின் 3 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள், ஐஸ் கட்டி ஆலைகள், குளிர்பதன வாகனங்கள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287001&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2287481) வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada