சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புற்றுநோய் சிகிச்சை மையங்களின் நிலவரம் குறித்த தகவல்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUL 2026 1:54PM by PIB Chennai

சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலுக்கு உட்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும்தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாகச் செயல்படுத்தப்படும் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசியத் திட்டத்தின் கீழ்நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொழில்நுட்பம் நிதி உதவிகளை வழங்குகிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம்அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய் மருத்துவம் அறுவை சிகிச்சைகதிர்வீச்சு சிகிச்சை  உள்ளிட்ட 27 மருத்துவப் பிரிவுகளின் கீழ் 1,961 வகையான மருத்துவ நடைமுறைகளுக்குப் பணமில்லா சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வாய்மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்கள் உள்ளிட்ட பொதுவான தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள்  'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்'கள் வாயிலாகப் பயிற்சி பெற்ற முன்கள சுகாதாரப் பணியாளர்களால் நடத்தப்படுகின்றன. இது நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கும்சரியான நேரத்தில் மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைப்பதற்கும் வழிவகுக்கிறது. இதன் மூலம் நோயைக் கண்டறிவதிலும் சிகிச்சையைத் தொடங்குவதிலும் ஏற்படும் தாமதங்கள் குறைக்கப்படுகின்றன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திஅக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286948&reg=3&lang=1

***

SS/PKV/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2287456) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी