மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

தெலங்கானாவில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 48 மருந்து உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன மத்திய அரசு

प्रविष्टि तिथि: 21 JUL 2026 1:56PM by PIB Chennai

இந்தியாவில் மருந்துகளுக்கான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தெலங்கானா மாநிலத்தில் 13 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நல்கொண்டாசங்காரெட்டியாதாத்ரி புவனகிரிமேடக் ஆகிய மாவட்டங்களில் இந்த ஆலைகள் அமைந்துள்ளதாக மத்திய ரசாயனம்உரத்துறை இணைமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், மருந்துத் துறையில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 16 அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தெலங்கானாவில் 48 உற்பத்தி ஆலைகள் மூலம் மருந்துகளை உற்பத்தி செய்து வருவதாகத் தெரிவித்தார். இவை சங்காரெட்டிஹைதராபாத்மேட்சல்-மல்காஜ்கிரிரங்காரெட்டி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286950&reg=3&lang=1

 

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2287428) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu