ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் கட்டமைப்பு திட்டம்: டிஜிட்டல் துறையில் மகத்தான சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUL 2026 3:54PM by PIB Chennai

ஆயுஷ் துறையின் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்கும் 'ஆயுஷ் கிரிட்' (Ayush Grid) திட்டத்தின் கீழ் எட்டப்பட்டுள்ள முக்கிய மைல்கற்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அமைச்சகத்தின் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் 'My Ayush' போர்டல் மற்றும் AI சாட்பாட் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்திற்காக 5,386 மையங்களில் A-HMIS டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 43,000+ ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய 'ஆயுஷ் ஆராய்ச்சி போர்டல்' மற்றும் மூலிகைகளுக்கான 'e-Charak' சந்தை தளம் சிறப்பாகச் செயல்படுகின்றன.

yYoga, Y-Break Pro செயலி மற்றும் யோகா தின 'யோகா சங்கம்' நிகழ்வில் 7.6 லட்சம் அமைப்புகள் பங்கேற்றுள்ளன. பிரதமரின் விரைவுசக்தி (PM-GATI SHAKTI) தளம் மூலம் 6,002 ஆயுஷ் மையங்கள் வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆயுஷ்/சித்த மருத்துவமனைகளில் ஆயஷ்-சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (A-HMIS) முறை மூலம் நோயாளிகளின் மின்னணு சுகாதாரப் பதிவேடுகள் (EHR) பராமரிக்கப்படுகின்றன. 'e-Charak' தளம் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூலிகைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் சித்த மருந்து உற்பத்தியாளர்கள் நேரடியாக வணிக தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287030&reg=3&lang=1

****

TV/NB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2287395) வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी