சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தெலங்கானவில் என்எச்-63, என்எச்-563 பகுதிகளில் விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
20 JUL 2026 4:02PM by PIB Chennai
வெமுலவாடா கோயில் நகரம், வரலாற்று சிறப்புமிக்க தர்மபுரி முதல் நிஜமாபாத், ஜக்தியால், கரீம் நகர், மான்செரியல் போன்ற வேளாண் மற்றும் தொழில் மையங்கல் வரை வடக்கு தெலுங்கானாவின் வளர்ச்சி பயணம் அதன் போக்குவரத்துக் கட்டமைப்பின் வலிமையுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாலும், பொருளாதார நடவடிக்கை விரிவடைவதாலும் என்.எச் 63 முதல் என்.எச் 563 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
புனிதத்தலங்கள், தொழில் மையங்கள், சரக்கு போக்குவரத்து மையங்கள், வேளாண் பொருட்கள் சந்தைகள் ஆகியவற்றுக்கான இணைப்பை மேம்படுத்தும் நவீன நெடுஞ்சாலைக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம், பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது சில முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, என்.எச் 563-ன் ஜக்தியால் - கரீம்நகர் பிரிவு மற்றும் என்.எச் 63-ல் அர்மூர் - ஜக்தியால் – மான்செரியல் பிரிவு ஆகியவை நான்கு வழிச் சாலைகளாக விரிவுபடுத்தப்பட உள்ளன.
மொத்தம் 190.76 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமையவுள்ள இத்திட்டங்கள் தெலங்கானா போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286566®=3&lang=1
***
SS/IR/SM/PS
(வெளியீட்டு அடையாள எண்: 2286913)
வருகையாளர் எண்ணிக்கை : 39