திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
பிஎம்-சேது திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளின் தற்போதைய நிலை
प्रविष्टि तिथि:
20 JUL 2026 4:13PM by PIB Chennai
மேம்படுத்தப்பட்ட தொழிற்பயிற்சிக்கான கல்வி நிறுவனங்கள் மூலம் பிரதமரின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புத் திறன் மாற்றத்திற்கான (பிஎம்-சேது) திட்டம், நாட்டில், தொழிற்கல்விப் பயிற்சியின் ஒட்டுமொத்த தரம், அதன் பயன்பாட்டுத் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 60,000 கோடியாகும். மத்திய அரசின் பங்களிப்பாக ரூ. 30,000 கோடியும், மாநில அரசின் பங்களிப்பாக ரூ. 20,000 கோடியும், தொழில்த் துறையின் பங்களிப்பாக ரூ. 10,000 கோடியும் இதில் அடங்கும்.
இத்திட்டம் இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது:
முதலாவதாக, மையம் அல்லது கிளை என்ற மாதிரியின் அடிப்படையில், 1,000 அரசு தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்களை (200 கல்வி மையங்கள், 800 கிளை நிறுவனங்கள்) மேம்படுத்துவதாகும். இந்த மேம்பாட்டுப் பணிகளில், நவீன வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், டிஜிட்டல் உள்ளடக்கங்கள், தொழில் துறைத் தேவைகளுக்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
இரண்டாவதாக, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், கான்பூர், லூதியானா ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஐந்து தேசிய திறன் பயிற்சி நிலையங்களின், செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல் ஆகும். இதில் திறன் மேம்பாட்டிற்கான துறை சார்ந்த தேசிய சிறப்பு மையங்களை அமைத்தல், உலகளவில் பல்வேறு நாடுகளுடனான ஒத்துழைப்புடன் பயிற்சியாளர்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளித்தல், அதற்கான பாடத்திட்டங்களை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்களின் தரம், அதன் பயன்பாட்டுத் தன்மையை மேம்படுத்துவதற்காக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பிஎம்-சேது திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286579®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2286875)
आगंतुक पटल : 12