எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீலகிரி மாவட்டம் குந்தாவில், 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கான திட்டப் பணிகள், 2027 பிப்ரவரி மாதம் நிறைவடையும் - மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக்

प्रविष्टि तिथि: 20 JUL 2026 3:45PM by PIB Chennai

மத்திய அரசின் உதவியுடன், நீலகிரி மாவட்டம் குந்தாவில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால், 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நீர்மின் உற்பத்தி நிலையத்தின், பம்ப் மூலம் நீரேற்றும் செய்து தண்ணீரை சேமிப்பதற்கானப் பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகள், அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

நாடு முழுவதிலும் மொத்தம் 15,870 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 11 நீரேற்ற சேமிப்புத் திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன. இதன்படி மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 4 திட்டங்களும், ஆந்திர பிரதேசத்தில் 3 திட்டங்களும், கர்நாடகாவில் 2 திட்டங்களும், தமிழ்நாடு, மத்திய பிரதேசத்தில் தலா ஒரு திட்டமும் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளன.   

கூடுதலாக, மொத்தம் 8,140 மெகாவாட் திறன் கொண்ட 6 திட்டங்களுக்கு மத்திய மின்சார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இவை இன்னும் கட்டுமானப் பணிக்காக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மாநிலங்களவையில், கேள்வி ஒன்றிற்கு, மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286558&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2286868) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी