தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில், ஆசிரியர்கள் மாணவிகளைச் சோதனையிட்டது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

प्रविष्टि तिथि: 20 JUL 2026 5:20PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில், லிவாலி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், 9 ,11-ம் வகுப்பு மாணவிகளை இரண்டு ஆசிரியர்கள் சோதனையிட்டதாகவும், ஆடைகளைக் கழற்றக் கட்டாயப்படுத்தியதாகவும் ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம்  தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

ஆசிரியர்களில் ஒருவருக்குச் சொந்தமான ரூ. 1,000 காணாமல் போனதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. மாணவிகள் ஆசிரியர்களால் தாக்கப்பட்ட போதிலும், அவர்களிடம் இருந்து பணம் எதுவும் மீட்கப்படவில்லை.

அந்தச் செய்தியில் உள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாணவிகளின் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கருதப்படும் தீவிர விவகாரமாக அமையும் என்று ஆணையம் கருதுகிறது. எனவே, இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அம்மாநிலத் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286657&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2286866) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी