சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
'டிஜிட்டல் லோக்கல் பாஸ்' மற்றும் 'மார்க்மித்ரா' உதவி மையத்தின் மூலம், டிஜிட்டல் சேவைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேம்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
20 JUL 2026 6:15PM by PIB Chennai
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா மற்றும் எளிதான வாழ்வை மேம்படுத்தும் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, தேசிய நெடுஞ்சாலைப் பயனாளர்களுக்கான டிஜிட்டல் சூழலை வலுப்படுத்தும் விதமாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது ‘ராஜ்மார்க்யாத்ரா’ (Rajmargyatra) செல்பேசி செயலியில், இணையவழி ‘உள்ளூர் அனுமதிச் சீட்டுகள்’ (Local Passes) மற்றும் டிஜிட்டல் முறையில் இயங்கும் ‘மார்க்மித்ரா’ (MargMitra) உதவி மையம் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் அனுமதிச் சீட்டுகள் சேவை, தகுதியுள்ள பயணிகள் சுங்கச்சாவடிக்கு நேரில் செல்லாமலேயே ராஜ்மார்க்யாத்ரா செயலி மூலம் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணச் சீட்டைப் பெற வழிவகை செய்கிறது. தில்லியில் உள்ள நகர்ப்புற விரிவாக்கச் சாலை-II -இல் அமைந்துள்ள முண்ட்கா – பக்கர்வாலா சுங்கச்சாவடியில் இந்த டிஜிட்டல் உள்ளூர் சுங்கக் கட்டணச் சீட்டு வசதி முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள பிற சுங்கச்சாவடிகளிலும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2286722®=3&lang=1
****
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2286865)
आगंतुक पटल : 21