திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினர் பகுதிகளில் திறன் மையங்களை அமைத்தல்

प्रविष्टि तिथि: 20 JUL 2026 4:10PM by PIB Chennai

மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகம், பழங்குடியின மக்களின் வாழ்வாதார வாய்ப்புகள், தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காகப் பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தை ட்ரைஃபெட் அமைப்பு மூலம் செயல்படுத்தி வருகிறது.

மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 12,48,067 உறுப்பினர்களைக் கொண்ட 4,172 பழங்குடினர் மேம்பாட்டு மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பழங்குடியினப் பகுதிகளின் வளர்ச்சிக்காகத் தார்த்தி ஆபா பழங்குடியின கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் ஜன்மன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வாழ்வாதார இடைவெளிகளைக் குறைக்கும் நோக்கில் 15 மாநிலங்களில் உள்ள 30 பழங்குடியின மாவட்டங்களில் 30 பழங்குடியின திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம், தேசிய திறன் மேம்பாட்டு நிதியின் கீழ் 400 ஜவஹர் நவோதயா பள்ளிகள், 200 ஏகலவ்யா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் திறன் ஆய்வகங்களை அமைத்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் தலா இரண்டு ஆய்வகங்கள் வீதம் மொத்தம் 1,200 தொழிற்கல்வித் திறன் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, 1,200 ஆசிரியர்களுக்குத் திறன் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286576&reg=3&lang=1   

***

TV/PD/RJ


(रिलीज़ आईडी: 2286835) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी