நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி வாயுவாக்கல் திட்டத்திற்கான இலக்குகள்
प्रविष्टि तिथि:
20 JUL 2026 4:24PM by PIB Chennai
தேசிய நிலக்கரி வாயுவாக்கல் திட்டத்தின் கீழ், 2030-ம் ஆண்டிற்குள் 100 மில்லியன் டன் அளவிற்கான நிலக்கரி வாயுவாக்கல் திறனை எட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஆண்டொன்றுக்கு 22.6 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி வாயுவாக்கல் திறன் செயல்பாட்டில் உள்ளது அல்லது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில்,
(i) ஜிண்டால் ஸ்டீல் லிமிடெட் - ஆண்டொன்றுக்கு 8 மில்லியன் டன் (செயல்பாட்டில் உள்ளது)
(ii) தல்ச்சர் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் - ஆண்டொன்றுக்கு 2.6 மில்லியன் டன் (செயல்படுத்தப்பட்டு வருகிறது)
(iii) ₹8,500 கோடி மதிப்பிலான நிதி ஊக்கத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 8 திட்டங்கள் - ஆண்டொன்றுக்கு 12 மில்லியன் டன் (செயல்படுத்தப்பட்டு வருகிறது)
100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்கம் செய்யும் தேசிய இலக்கை எட்டும் வகையில், நிலக்கரி / லிக்னைட் வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ரூ 37,500 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய மற்றொரு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்புதிய திட்டம் ஆண்டொன்றுக்கு 75 மில்லியன் டன் நிலக்கரியைப் பயன்படுத்தும் என்றும், இத்திட்டம் 100 மில்லியன் டன் நிலக்கரி / லிக்னைட் வாயுவாக்கல் இலக்கை அடைவதில் கணிசமான பங்களிப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கரி வாயுவாக்கத் துறையில், தனியார் - பொதுத் துறை முதலீடுகளை ஈர்க்கும் வகையில், புதிதாக அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், ஊக்கத்தொகை வழங்கும் கட்டமைப்பை மத்திய அரசு வலுப்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில்,மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, இன்று, கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286591®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2286820)
आगंतुक पटल : 14