பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய மாணவர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 19 JUL 2026 7:09PM by PIB Chennai

58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று, மதிப்புமிக்க உலகளாவிய போட்டியில் இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ள தேபதத்தா பிரியதர்ஷி, ஹர்ஷித் சிங்கால், கபீர் சில்லர், சந்தீப் குச்சி ஆகியோரைக் கொண்ட இந்திய அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.07.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த அணியின் அறிவுத்திறன், அர்ப்பணிப்பு, அறிவியல் மீதான ஆர்வம் ஆகியவை ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளது என்றும், இது எண்ணற்ற இளம் மனங்களை வேதியியல் படிக்கவும் அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

இந்தியாவின் இளையோர் சக்தி உலக அளவில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது!

58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்ற நமது அணியில் இடம்பெற்ற தேபதத்தா பிரியதர்ஷி, ஹர்ஷித் சிங்கால், கபீர் சில்லர், சந்தீப் குச்சி ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க மேடையில் இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறனாகும் இது.

இவர்களின் அறிவுத்திறன், அர்ப்பணிப்பு, அறிவியல் மீதான ஆர்வம் ஆகியவை ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளது. இது எண்ணற்ற இளம் மனங்களை வேதியியல் படிக்கவும் அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கும்.

(Release ID: 2286345)

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2286368) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Telugu , Kannada , Malayalam , Manipuri , Assamese , Odia , English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati