இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசத்தைக் கட்டமைக்கும் கிரியா ஊக்கிகளாக இளம் அதிகாரிகள் திகழ வேண்டும் என மத்திய அமைச்சர் ரக்ஷா நிகில் காட்சே அழைப்பு விடுத்துள்ளார்
प्रविष्टि तिथि:
19 JUL 2026 5:35PM by PIB Chennai
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின், இளைஞர் நலத் துறை நடத்திய மண்டல அளவிலான நான்காவது சிந்தனை முகாம், இன்று (19.07.2026) லக்னோவில் நிறைவடைந்தது. இதன் மூலம், "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வளர்ச்சியடைந்த இளைஞர்கள்" என்ற கருப்பொருளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான கலந்தாய்வுகளின் தொடர் நிறைவடைந்தது. "தீர்வுக்கான தீர்மானம்" என்பதை மையமாகக் கொண்ட அமர்வில், முந்தைய கலந்தாய்வுகளில் இருந்து உருவான யோசனைகளையும் பரிந்துரைகளையும், இளைஞர்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தையும், அடித்தள செயலாக்கத்தையும் வலுப்படுத்துவதற்கான உத்திகளாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டது.
நிறைவு அமர்வில் உரையாற்றிய மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே, தேசத்தைக் கட்டமைப்பதில் இளைஞர்களைத் தீவிரமாகப் பங்கேற்க ஊக்குவிப்பதில் இளம் அதிகாரிகளுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என்றார். "நீங்கள் களத்தில் பணியாற்றுவதால், சவால்களை நன்கு புரிந்துகொண்டு, சரியான கேள்விகளைக் கேட்டு, நடைமுறைத் தீர்வுகளைக் காண்கிறீர்கள். அந்த அர்ப்பணிப்பு, ஒவ்வொரு விளக்கக்காட்சியிலும் தெளிவாகப் பிரதிபலித்தது" என்று அவர் குறிப்பிட்டார்.
களப்பணியாளர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், 'மை பாரத்', 'அனுபவக் கற்றல் திட்டம்' , 'பிரதமரின் பயிற்சித் திட்டம்', 'உடற்தகுதி இந்தியா' ஆகியவை குறித்த விளக்கக்காட்சிகள், அவர்களின் அடித்தள அர்ப்பணிப்பையும் உள்ளூர் சவால்கள் குறித்த நடைமுறைப் புரிதலையும் பிரதிபலித்தன என்றார். "இது வெறும் கடமை மட்டுமல்ல; ஒரு பொறுப்பு. வாழ்க்கை வசதியை உருவாக்குவதோடு, நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வது குறித்தும் நமது இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலத்தை எழுதுவார்கள், உங்களில் ஒவ்வொருவருக்கும் இளைஞர்களின் நாயகனாக மாறும் வாய்ப்பு உள்ளது," என்று அமைச்சர் கூறினார்.
நிறைவு விழாவின் போது, அதிக எண்ணிக்கையிலான 'மை பாரத்' பதிவுகளின் அடிப்படையில் உத்தரப் பிரதேசம் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது. அதே நேரத்தில், தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன், டையூ யூனியன் பிரதேசம், அதன் இளைஞர் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் மிக உயர்ந்த பதிவு சதவீதத்தை அடைந்ததற்காகப் பாராட்டப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286324®=3&lang=1
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2286361)
आगंतुक पटल : 16