பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திருமதி சென்னம்மா அவர்களின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 18 JUL 2026 8:59PM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு தேவ கௌடாவின் மனைவி திருமதி சென்னம்மா அவர்களின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். திருமதி சென்னம்மா அவர்கள், பணிவு மற்றும் சமூக சேவைக்கான பேரார்வத்திற்காகப் போற்றப்பட்டார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் திரு தேவ கௌடா அவர்களின் மனைவி திருமதி சென்னம்மா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவர் தனது பணிவுக்காகவும், சமூக சேவை மீதான பேரார்வத்திற்காகவும் பெரிதும் போற்றப்பட்டார். இந்தத் துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் திரு தேவ கௌடா அவர்களுடனும் அவரது குடும்பத்தினர் அனைவருடனும் உள்ளன. ஓம் சாந்தி.

(Release ID: 2286187)

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2286272) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam