எஃகுத்துறை அமைச்சகம்
தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகத்தின் வணிகப் பிரிவு இயக்குநராக திரு விவேக் நிஷாந்த் நாத் பொறுப்பேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUL 2026 7:35PM by PIB Chennai
இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தி நிறுவனமான தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தின் (என்எம்டிசி) வணிகப் பிரிவு இயக்குநராக திரு விவேக் நிஷாந்த் நாத் பொறுப்பேற்றுள்ளார். உலோகம் மற்றும் சுரங்கத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், சர்வதேச வணிகச் செயல்பாடுகள், கொள்முதல், சரக்குக் கையாளுதல் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை ஆகியவற்றில் மிகுந்த அனுபவம் கொண்டுள்ளார்.
1992-ல் என்எம்டிசி நிறுவனத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய திரு நாத், அங்கு ஏறக்குறைய 15 ஆண்டுகள் பல்வேறு வணிகப் பணிகளை மேற்கொண்டு, உள்நாட்டில் இரும்புத் தாது விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையில் பரந்த அனுபவத்தைப் பெற்றார். பின்னர், எஸ்ஸார் ஸ்டீல் லிமிடெட் மற்றும் ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா ஆகிய நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், 2021-ல் ஒடிசா மைனிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓஎம்சி) நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286145®=3&lang=1
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2286265)
வருகையாளர் எண்ணிக்கை : 42