சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் தூய்மைப் பணியாளர்களின் நலன் குறித்து தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் ஆய்வு

प्रविष्टि तिथि: 18 JUL 2026 6:41PM by PIB Chennai

தூய்மைப் பணியாளர்களின் பணிச்சூழல், பாதுகாப்பு, ஒட்டுமொத்த நலன் ஆகியவற்றை மேம்படுத்தும் ஒரு முக்கிய முன்முயற்சியாக, தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் புதுதில்லி மாநகராட்சியில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டது.

தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய உறுப்பினர் திரு கரம் சிங் கர்மா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், புதுதில்லி மாநகராட்சியின் செயலாளர் திரு ராகுல் சிங், தலைமைப் பொறியாளர்கள், தலைமை மருத்துவ சுகாதார ஆய்வாளர்கள், மூத்த துறைத் தலைவர்கள், தூய்மைப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடல்களின் போது, திரு கரம் சிங் கர்மா பேசுகையில், அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்ய வேண்டும் என்றார். தூய்மைப் பணியில் இயந்திரமயமாக்கப்பட்ட செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். பொது சுகாதாரம், பொறியியல் துறைகளின் விரிவான செயல்பாட்டுக் கட்டமைப்பை அவர் ஆய்வு செய்தார்.

தலைநகரைத் தூய்மையாகப் பேணுவதோடு, தூய்மைப் பணியாளர்களின் நலனை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை புதுதில்லி மாநகராட்சி செயலாளர் திரு ராகுல் சிங் எடுத்துரைத்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286126&reg=3&lang=1

***

TV/PLM/PD


(रिलीज़ आईडी: 2286138) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati