சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதார சீர்திருத்தங்களின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள் தொடர்பான இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு

प्रविष्टि तिथि: 18 JUL 2026 3:56PM by PIB Chennai

சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சுகாதார ஆணையம், ஆயுஷ்மான் பாரத், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் ஆகியவை குறித்து, 2026 ஜூலை 17, 18 தேதிகளில் புது தில்லியில் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் தேசிய ஆலோசனைக் கூட்டம் இன்று (18.07.2026) நிறைவடைந்தது.

இரண்டு நாள் ஆய்வுக் கூட்டமானது, சுகாதார திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கும், முக்கிய செயலாக்க முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதற்கும், மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களின் சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்கும், இந்தியாவின் சுகாதாரத் துறை சீர்திருத்தங்களின் அடுத்த கட்டத்திற்கான செயல் திட்டத்தை வகுப்பதற்கும் மூத்த அதிகாரிகளை ஒன்றிணைத்தது.

முதல் நாளில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளில் நிதி நிலைத்தன்மை, பொது சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்துதல், சுகாதாரப் பகுப்பாய்வு, சுகாதாரச் சூழலமைப்பு முழுவதும் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

நிறைவு அமர்வில் உரையாற்றிய சுகாதாரம் அமைச்சகத்தின் செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, ஆயுஷ்மான் பாரத் தொடர்பான திட்டங்கள் இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்புச் சூழலமைப்பின் ஒருங்கிணைந்த தூண்களாக உருவெடுத்துள்ளன என்று குறிப்பிட்டார். டிஜிட்டல் சுகாதார சேவைகள், செயலிகளின் பயன்பாட்டை அதிகரிக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை வலியுறுத்திய அவர், இந்த முயற்சிகளின் வெற்றி, அவற்றை அனைவருக்கும் பயனுள்ளதாக மாற்றுவதில்தான் உள்ளது என்று எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286071&reg=3&lang=1

***

TV/PLM/PD


(रिलीज़ आईडी: 2286082) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi