தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

முதலாவது அகில இந்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது

प्रविष्टि तिथि: 17 JUL 2026 9:01PM by PIB Chennai

தேர்தல் ஆணையம், “பங்குதாரர்களை இணைத்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்: தேர்தல்களில் ஊடகங்களின் பங்கு” என்ற கருப்பொருளின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 380-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து, முதல் அகில இந்திய ஊடக மாநாடு 2026-ஐ நடத்தியது.

 

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் பேசுகையில், இந்தியாவில் தேர்தல்களானது, இந்திய அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் சட்டங்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றின்படி நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார். இந்தியாவில் தேர்தல் செயல்முறைகளில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட தரப்பினரால் முழு தேர்தல் செயல்முறையும் ஒரே நேரத்தில் தணிக்கை செய்யப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

 

சுமார் 95 கோடியைக் கொண்ட இந்தியாவின் வாக்காளர் பட்டியல் என்பது, காலப்போக்கில் மாறும் தன்மையுடைய ஒரு ஆவணம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறினார். வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் அடிப்படையான சட்டப்பூர்வப் பாதுகாப்புகளைக் குறிப்பிடுகையில், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும, 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்தச் செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குப்பதிவு, நாட்டின் தேர்தல் முறையின் மீது இந்திய வாக்காளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும், இந்திய ஜனநாயகத்தின் வீரியத்திற்கும் ஓர் சான்றாகும் என்று திரு ஞானேஷ் குமார் கூறினார். சிறப்புத் தீவிர திருத்த (SIR) செயல்பாட்டில் பங்கேற்ற இந்திய வாக்காளர்கள் அனைவருக்கும் அவர் நன்றியையும் தெரிவித்தார்.

 

தேர்தல் செயல்முறைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து, தெளிவான புரிதலை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

 

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குப்பதிவு செயல்முறை, வாக்கு எண்ணிக்கை செயல்முறை ஆகியவை செயல்விளக்கம் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, திரு ஞானேஷ் குமாருடன் பங்கேற்பாளர்களின் கேள்வி -பதில் அமர்வும் நடைபெற்றது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285961&reg=3&lang=1

(Release ID : 2285961)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2285992) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी