வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பின்லாந்தின் முன்னணி தொழில்துறையினருடன் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துரையாடல்
प्रविष्टि तिथि:
17 JUL 2026 6:55PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், பின்லாந்தின் முன்னணி தொழில்நுட்ப, தொழில்துறை நிறுவனங்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தினார். இந்தக் கலந்துரையாடல்கள், இந்தியா-பின்லாந்து உறவுகளில் ஏற்பட்டுள்ள வலுவான உத்வேகத்தை எடுத்துக் காட்டும் வெற்றிகரமான, பரந்த அளவிலான ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகும். மேம்பட்ட உற்பத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், புத்தாக்கம், நிலையான உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான இந்தியா - பின்லாந்தின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த கலந்துரையாடல்கள் பிரதிபலித்தன.
திரு பியூஷ் கோயல், நோக்கியா கார்ப்பரேஷனின் மூத்த தலைவர்களைச் சந்தித்தார். அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு, 5ஜி, 6ஜி தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மின்னணு உற்பத்தி, ஆராய்ச்சி - மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் அமைந்தன. இந்தியாவின் தொலைத்தொடர்புச் சூழலில் நோக்கியாவின் நீண்டகால பங்களிப்பை இந்த உரையாடல் எடுத்துக்காட்டியதுடன், வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்தது.
அமைச்சர், கோன் கார்ப்பரேஷனின் தலைவர், மூத்த தலைவர்களுடனும் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில், திறன்மிகு நகர்ப்புற உள்கட்டமைப்பு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டு தொழில்நுட்பங்கள், நீடித்த கட்டுமானத் தீர்வுகள், மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285875®=3&lang=1
(Release ID : 2285875)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2285990)
आगंतुक पटल : 7