வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2022–23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட திருத்தியமைக்கப்பட்ட முக்கியத் தொழில்துறை குறியீட்டுத் தொடரை பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிடவுள்ளது
प्रविष्टि तिथि:
17 JUL 2026 3:43PM by PIB Chennai
மத்திய தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள பொருளாதார ஆலோசகர் அலுவலகம், 2022–23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட முக்கியத் தொழில்துறை குறியீட்டின் திருத்தியமைக்கப்பட்டத் தொடரை 2026 ஜூலை 20 அன்று மாலை 5:00 மணிக்கு வெளியிடவுள்ளது. இந்தத் திருத்தியமைக்கப்பட்ட தொடர், 2011–12-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட தற்போதைய தொழில்துறை குறியீட்டிற்கு மாற்றாக அமையும்.
இந்த குறியீடு மாதந்தோறும் தொகுக்கப்படுகிறது. இந்த வெளியீட்டில், 2026 ஜூன் மாதத்திற்கான தற்காலிக தொழில்துறை குறியீட்டுடன், ஏப்ரல் 2023 முதல் மே 2026 வரையிலான (38 மாதங்கள்) முந்தைய காலத் தரவுகளும் இதில் இடம்பெறும்.
நிறுவப்பட்ட வழிமுறைகளின்படி, முக்கிய தொழில்துறை குறியீட்டுத் (2022–23) தொடருக்கான குறியீட்டு காரணிகள், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்தி குறியீட்டு 2022–23 தொடரின் காரணிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன. தொழில்துறை உற்பத்தி குறியீடுகளிலிருந்து பெறப்பட்ட முக்கிய தொழில்துறை குறியீட்டுத் தொகுப்புப் பொருட்களின் காரணிகள், அதற்கான இறுதி எடைகளைத் தீர்மானிக்கும் வகையில், மொத்தம் 100 என்ற அளவை எட்டும் விதமாக விகிதாச்சார அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285729®=3&lang=1
(Release ID: 2285729)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2285958)
आगंतुक पटल : 7