அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அடுத்த தலைமுறை மின்னேற்ற மின்கலன்களுக்காக அதிவேக ஆர்கானிக் ஆனோடுகள் வடிவமைப்பு
प्रविष्टि तिथि:
17 JUL 2026 3:06PM by PIB Chennai
ஆராய்ச்சியாளர்கள், மேம்பட்ட மின் சேமிப்புத் திறனுடன் கூடிய அதிக செயல்திறன் மிக்க லித்தியம்-அயன் மின்கலன்களுக்காக (பேட்டரி), ஒரு புதிய நுண்துளைகளுடைய கரிம ஆனோடு பொருளை வடிவமைத்துள்ளனர். மின்சார வாகனங்கள், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மின் சேமிப்பின் தேவை ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஆயுட்காலத்தில் சமரசம் செய்யாமல் விரைவாக மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலன்களுக்கான (பேட்டரி) தேவையும் அதிகரித்து வருகிறது.
இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில், அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம், எஸ்.என். போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம் ஆகிய நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள், மின்கலன்களில் மின்னாற்றலைச் சேமிக்கும் மிகச்சிறிய மின்னூட்டம் பெற்ற துகள்களான லித்தியம் அயனிகளை, மிகவும் எளிதாக நகரச் செய்யும் ஒரு புதிய நுண்துளைகளுடைய கரிமப் பொருளை (கோவலன்ட் ஆர்கானிக் ஃபிரேம்வொர்க்) உருவாக்கியுள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்தப் பொருள், ஒரு மின்கலத்தை ஒரு நிமிடத்திற்கும் சற்று அதிகமான நேரத்தில் 80% மின்னேற்றம் அடையச் செய்ததுடன், பலமுறை மின்னேற்றம், மின்னிறக்கம் செய்யும் சுழற்சிகளிலும் அதன் சிறந்த செயல்திறனைத் தக்கவைத்துக் கொண்டது.
நீடித்த மின்சக்தி சேமிப்புத் தொழில்நுட்பங்களில் உள்ள முக்கிய சவால்களை எதிர்கொள்வதில் பல்துறை ஒத்துழைப்பின் வலிமையை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285704®=3&lang=1
(Release ID : 2285704)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2285948)
आगंतुक पटल : 6