இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
லக்னோவில் நடைபெற்ற மைபாரத் தேசிய இளம் தன்னார்வலர்கள் மாநாட்டில் 1500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்
இடுகை இடப்பட்ட நாள்:
17 JUL 2026 4:15PM by PIB Chennai
லக்னோவில் நடைபெற்ற மைபாரத் தேசிய இளம் தன்னார்வலர்கள் மாநாட்டில் 1500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த மாநாடு இளைஞர்களின் தலைமைத்துவம், தன்னார்வ தொண்டு, சமூக ஈடுபாடு ஆகியவற்றை வலுப்படுத்துவது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
மை பாரத் தளம் குறித்த அறிதல் அமர்வுகள், சமூக அணிதிரட்டல், போதைப் பொருள் இல்லாத இளைஞர்கள் குறித்த கலாச்சார நிகழ்ச்சி ஆகியவை இந்த மாநாட்டின் சிறப்பிடம் பெற்றன. மேலும் இளம் சாதனையாளர்கள் பாராட்டப்பட்டனர்.
இந்த மாநாட்டில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று உரையாற்றினார். கடமை மனோபாவம், சேவை, தேசமே முதன்மை என்ற உணர்வால் வழிநடத்தப்படும் வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ல் சிற்பிகளாக இளைஞர்கள் மாற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகள் இளைஞர்களுக்கானவை என்றும் நாங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் காணலாம் ஆனால், இளைஞர்களாகிய நீங்கள் தான் அதில் வாழ்வீர்கள் என்றும் கூறிய அமைச்சர் அதனைக் கட்டமைப்பது இளைஞர்களின் கடமை என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285761®=3&lang=1
****
TV/SMB/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2285866)
வருகையாளர் எண்ணிக்கை : 47