திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
வடகிழக்குப் பிராந்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில்பழகுநர் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
17 JUL 2026 3:21PM by PIB Chennai
வடகிழக்குப் பிராந்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க பிரதமரின் தேசிய தொழில்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு, அமைச்சகத்தின் மூலம் நிதியாண்டு 2026-27-ல் இந்தத் திட்டம் குவஹாத்தியில் உள்ள இந்திய தொழில்முனைவு நிறுவனத்தால் அமல்படுத்தப்படும். 2025-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட முன்னோடி முயற்சியில் வெற்றியையடுத்து நீடிக்கப்பட்ட இந்த சிறப்பு தலையீடு தலையீடு திறன் இந்தியா இயக்கத்தின் மூலம் வடகிழக்குப் பிராந்தியத்தில் இளைஞர்களுக்கு நீடித்த வாழ்வாதாரத்தை உருவாக்கும்.
முன்னோடி முயற்சியைவிட 15 சதவீத அதிகரிப்புடன் 30,000 இளைஞர்கள் தொழில்பழகுநர்களாக இருப்பார்கள். இவர்களில் 15,000 பேர் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் எஞ்சிய 15,000 பேர் வடகிழக்கு மாநிலங்களிலும் தொழில்பழகுநர்களாக இருப்பார்கள். இந்தத் திட்டத்திற்கு 2026-27-ல் 57.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசத்தின் வளர்ச்சிக் கதைக்கு பங்களிப்புச் செய்ய வடகிழக்குப் பிராந்தியத்தின் திறமைமிக்க விருப்பம் நிறைந்த இளைஞர்கள், தயாராக உள்ளனர் என்று மத்திய திறன் மேம்பாடு தொழில்முனைவுத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சௌத்ரி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285718®=3&lang=1
****
TV/SMB/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2285865)
வருகையாளர் எண்ணிக்கை : 8