ஊரக வளர்ச்சி அமைச்சகம்
லட்சாதிபதி சகோதரிகளின் ஊரகத் தொழில், பாரம்பரிய கைவினைப் பொருட்கள், சந்தை ஆற்றலை வெளிப்படுத்திய பாரத் டெக்ஸ் 2026
प्रविष्टि तिथि:
17 JUL 2026 4:01PM by PIB Chennai
தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் மூலம் பாரத் டெக்ஸ் 2026-ல் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பங்கேற்றது. இதில் சுயஉதவிக் குழுக்களோடு தொடர்புடைய பெண்களின் தொழில் உணர்வு, கைவினைத்திறன் ஆகியவை வெளிப்பட்டன. இந்த நான்கு நாள் நிகழ்வு நாடு முழுவதும் உள்ள லட்சாதிபதி சகோதரிகளுக்கான அமைச்சகத்தின் தளமாக விளங்கியது.
நிறைவு நாள் நிகழ்வில் ஜவுளித்துறை செயலாளர் திருமதி நீலம் ஷாமிராவ், ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு டி கே அனில்குமார் உள்ளிட்டோர் அரங்குகளை பார்வையிட்டனர். இந்தக் கண்காட்சியில் முக்கிய அம்சமாக சரஸ்சக்தி சேகரிப்பு இடம் பெற்றிருந்தது. இதில் ஏராளமான பரிசுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பாரத் டெக்ஸ் 2020-ல் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பங்கேற்பு என்பது சந்தை அணுகலை ஊக்குவிப்பது, இந்தியாவின் வளமான ஜவுளி, பாரம்பரிய கைவினைப் பொருட்களைப் பாதுகாப்பது, தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் மூலம் தேசிய, சர்வதேச சந்தைகளுடன் ஊரக பெண் தொழில் முனைவோரை நினைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது என்பதன் மூலம் பெண்கள் தலைமையிலான ஊரகத் தொழில்களை வலுப்படுத்தும் அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285742®=3&lang=1
****
TV/SMB/KPG/SH
(रिलीज़ आईडी: 2285860)
आगंतुक पटल : 7