தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUL 2026 2:15PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI), தொலைத்தொடர்பு நுகர்வோரின் தகவலுக்காக, கர்நாடக உள்ளூர் சேவைப் பகுதியான உத்தர கன்னடா மாவட்டம் முழுவதும் 2026 மே மாதத்தில் நடத்தப்பட்ட மொபைல் நெட்வொர்க் தரச் சோதனையின் (IDT) முடிவுகளை வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் மொபைல் நெட்வொர்க்கில் குரல், தரவு ஆகிய இரண்டின் தரத்தை மதிப்பிட்டு சரிபார்ப்பது இதன் நோக்கமாகும். இந்த சோதனையின் போது, கவரேஜ், அழைப்புத் துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம், செயல்திறன் போன்ற முக்கிய சேவைத் தர (QoS) அளவுருக்களில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் செயல்திறனை டிராய் பதிவு செய்கிறது. பின்னர் இந்த முடிவுகள், நுகர்வோருக்குத் தெரிவிக்கவும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் வெளியிடப்படுகின்றன.
உத்தர கன்னட மாவட்டத்தில் முக்கிய அளவுருக்களுக்கான ஒட்டுமொத்த மொபைல் நெட்வொர்க் செயல்திறன் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது:-
கவரேஜ் இடைவெளி - இது ஏர்டெல்லுக்கு 5104 /34323 , பிஎஸ்என்எல் -க்கு 10378 /35480 , ஆர்ஜேஐஎல்- க்கு 7089 /37941, விஐஎல்- க்கு 6626 /28580 ஆக இருந்தது.
துண்டிக்கப்பட்ட அழைப்புகள் - வெற்றிகரமாக இணைக்கப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கையில், துண்டிக்கப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை ஏர்டெல்லுக்கு 14 /311 , பிஎஸ்என்எல்- க்கு 28 /306 , ஆர்ஜேஐஎல்- க்கு 17 /346, விஐஎல்- க்கு 12 /260 ஆக இருந்தது.
விரிவான அறிக்கைகள் www.trai.gov.in என்ற டிராய் இணையதளத்தில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285312®=3&lang=1
***
(Release ID: 2285312)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2285617)
வருகையாளர் எண்ணிக்கை : 45