தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மண்டல தொழிலாளர் நல ஆணையர்களுக்கான மூன்று நாள் பயிற்சித் திட்டம் தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 JUL 2026 12:48PM by PIB Chennai

புது தில்லியில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தேசிய சமூகப் பாதுகாப்பு அகாடமி (பிடியுஎன்ஏஎஸ்எஸ் - PDUNASS) சார்பில் மத்திய அரசின் மண்டல தொழிலாளர் நல ஆணையர்களுக்கான "மீட்பு மேலாண்மை" குறித்த மூன்று நாள் பயிற்சித் திட்டம் நேற்று (15.07.2026) தொடங்கியது. 2026 ஜூலை 17 வரை நடத்தப்படும் இந்தத் திட்டம், நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) உச்ச பயிற்சி நிறுவனமாக அமைந்துள்ள பிடியுஎன்ஏஎஸ்எஸ், பரந்த சமூகப் பாதுகாப்பிலும், தொழில்முறைத் திறன்களை வலுப்படுத்துவதற்காகவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இணை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து 26 மண்டல தொழிலாளர் ஆணையர்கள் கலந்துகொண்டுள்ளனர். இது சிறந்த நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க அமர்வில் அகாடமியின் இயக்குநர் திரு குமார் ரோஹித், உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்தொழிலாளர் நிர்வாகம், சமூகப் பாதுகாப்பு ஆளுகை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அமைப்புகளிடையே ஒத்துழைப்பையும் அறிவுப் பரிமாற்றத்தையும் வளர்ப்பதன் மூலம், திறன் மேம்பாட்டை இந்தப் பயிற்சித் திட்டம் மேலும் வலுப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285274&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2285616) வருகையாளர் எண்ணிக்கை : 34
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी