தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் நலன் அமைச்சர்களும் மத்திய இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜேவும் ஐதராபாதில் உள்ள போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டனர்

प्रविष्टि तिथि: 16 JUL 2026 4:58PM by PIB Chennai

ஐதராபாதில் உள்ள போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ், சிஐஐ பசுமை வர்த்தக மையத்தை மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர்  செல்வி ஷோபா கரந்தலஜே உடன் இணைந்து பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத்துறை அமைச்சர்களும் தூதுக்குழுத் தலைவர்களும் பார்வையிட்டனர். இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், ஐதராபாதில் ஏற்பாடு செய்யப்பட்ட 12-வது பிரிக்ஸ்  தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத்துறை அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக இப்பயணம் அமைந்தது. டிஜிட்டல் புதுமைக்கண்டுபிடிப்பு, செயற்கை நுண்ணறிவு, உலகளாவிய திறன் மையங்கள், எதிர்காலத்திற்கு தயரான திறன் மற்றும் நீடித்த தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை இது சுட்டிக்காட்டியது.

போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ்  வளாகத்திற்கு சென்ற போது தூதுக்குழுவினர் சுகாதாரம், வாகன உற்பத்தி மற்றும் உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டுள்ள போஷ், சிஐஐ (இந்தியத் தொழில் கூட்டமைப்பு), உலகளாவிய திறன் மையங்களில் உயர் தொழில்துறைத் தலைவர்களுடன் உரையாடினார்கள். இந்த உரையாடலின் போது உலகளாவிய திறன் மையங்கள் எவ்வாறு புதுமைக்கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உற்பத்தி பொறியியல், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகள், உலகளாவிய வர்த்தக மாற்றம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கிறது என்பது குறித்து வெளிப்படுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285401&reg=3&lang=1


***

SS/IR/KPG/RJ


(रिलीज़ आईडी: 2285612) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Gujarati