தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் என்டிபிசி நிறுவனத்தால் கட்டப்பட்ட நிலக்கரி சேமிப்பு குளத்தில் மூழ்கி மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாக வெளியான செய்தி குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

प्रविष्टि तिथि: 16 JUL 2026 7:53PM by PIB Chennai

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தின் காந்தி பகுதியில், தேசிய அனல் மின் கழகத்தால் (என்டிபிசி) கட்டப்பட்ட 'நிலக்கரி சேமிப்புக் குளத்தில்' மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக வெளியான செய்தி குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்தக் குளங்களில் என்டிபிசி-யால் பெருமளவு நிலக்கரி சாம்பல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் எந்த எச்சரிக்கை பலகைகளும் நிறுவப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

செய்தியின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், அவை மனித உரிமை மீறல் தொடர்பான கடுமையான பிரச்சினைகளை எழுப்புகின்றன என்று ஆணையம் கூறியுள்ளது. எனவே, இவ்விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரி, என்டிபிசி-யின் தலைவர், நிர்வாக இயக்குநர், பீகார் மாநிலம் முசாஃபர்பூரின் முதுநிலை காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

****

(Release ID : 2285503)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2285599) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी