தேசிய மனித உரிமைகள் ஆணையம்
உத்தரப்பிரதேசத்தில் துப்புரவுப் பணியின்போது விஷவாயுத் தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக வெளியான செய்தி குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
प्रविष्टि तिथि:
16 JUL 2026 7:57PM by PIB Chennai
உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம புத்தா நகர் மாவட்டத்தில், நொய்டா ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணியின்போது, கழிவுநீர் பாதையில் நச்சு வாயுவைச் சுவாசித்ததால் 28 வயதுடைய துப்புரவுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாக வெளியான ஊடகச் செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இது குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது. போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவுத் தொழிலாளர்கள் கழிவுநீர் பாதைக்குள் அனுப்பப்பட்டதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகச் செய்தியில் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவை மனித உரிமை மீறல் தொடர்பான சிக்கல்களை எழுப்புவதாக ஆணையம் கருதுகிறது. எனவே, இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நொய்டா ஆணையத்தின் தலைவர் மற்றும் கௌதம புத்தா நகர் காவல் ஆணையர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபரை காவல்துறையினரும், தீயணைப்புப் படையினரும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும், எனினும் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும், 2026 ஜூலை 15 அன்று வெளியான ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285507®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2285561)
आगंतुक पटल : 8