நிலக்கரி அமைச்சகம்
நவம்பர் 15 முதல் 17 வரை 'இந்தியா சுரங்க வாரம் 2026' கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி அறிவிப்பு
प्रविष्टि तिथि:
15 JUL 2026 8:04PM by PIB Chennai
2026 நவம்பர் 15 முதல் 17 வரை புது தில்லியில் உள்ள யசோபூமி மாநாட்டு மையத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் துறைக்கான இந்தியாவின் மிகப்பெரிய மாநாடு மற்றும் கண்காட்சியான 'இந்தியா சுரங்க வாரம் 2026' நடைபெறும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி மற்றும் இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே ஆகியோர் இணைந்து, இந்த மாநாட்டின் சின்னம் மற்றும் கையேட்டை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் நிலக்கரித் துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், சுரங்கத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு பியூஷ் கோயல், நிலக்கரித் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ரூபிந்தர் பிரார் மற்றும் இரு அமைச்சகங்களின் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான ஒரு சுரங்கத் துறையை உருவாக்கும் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கும் வகையில், “வலுவான வளங்கள், திறமையான சுரங்கம், நிலையான எதிர்காலம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த மூன்று நாள் உச்சிமாநாடு நடைபெறும்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ஜி. கிஷன் ரெட்டி, இந்தியா சுரங்க வாரம் 2026-ஐ, சுரங்கத் துறையில் இந்தியாவின் புதிய நம்பிக்கை, தொலைநோக்குப் பார்வை மற்றும் உலகளாவிய லட்சியங்களைப் பிரதிபலிக்கும் ஒரு மைல்கல் முயற்சி என்று விவரித்தார். கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், நிலையான மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சுரங்கத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கவும், அரசுகள், தொழில்துறை, முதலீட்டாளர்கள், தொழில்நுட்பத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறையினரை ஒன்றிணைக்கும் ஒரு முதன்மையான சர்வதேச தளமாக இந்த நிகழ்வு அமையும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, நிலக்கரிப் பரிவர்த்தனை மையங்களைப் பதிவு செய்வதற்கான இணையவழிச் செயலி மற்றும் மிக முக்கியமான மற்றும் உத்திசார் கனிமத் தொகுதிகளுக்கான ஏலத்தின் எட்டாவது கட்டம் ஆகியவற்றையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285100®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2285162)
आगंतुक पटल : 5