மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

அனைவரையும் உள்ளடக்கிய வங்கிச் சேவைக்காக பன்மொழி செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த, டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு - பஞ்சாப் நேஷனல் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

प्रविष्टि तिथि: 15 JUL 2026 5:54PM by PIB Chennai

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், டிஜிட்டல் இந்தியா அமைப்பின் ஒரு அங்கமான டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவும், பஞ்சாப் நேஷனல் வங்கியும், அனைவரையும் உள்ளடக்கிய வங்கிச் சேவை, மக்களை மையமாகக் கொண்ட நிதிச் சேவைகளுக்காக, பன்மொழி செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலானத் தீர்வுகளை மேம்படுத்துவதில், இணைந்து செயல்படுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திரு. அமிதாப் நாக், பஞ்சாப் நேஷனல் வங்கியின் டிஜிட்டல் வங்கி உருமாற்றப் பிரிவின் தலைமைப் பொது மேலாளர் (டிஜிட்டல்) திரு. அதீஷ் குமார் ரௌட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம், பாஷினியின் உள்நாட்டு பன்மொழி செயற்கை நுண்ணறிவுச் சூழலமைப்பைப் பயன்படுத்தி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் டிஜிட்டல் வங்கிச் சூழலமைப்பு முழுவதும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மொழி சார்ந்தத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், மொழி உள்ளடக்கிய வங்கிச் சேவைகளைச் சாத்தியமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான இந்திய மொழிகளில் வங்கித் தகவல்கள், டிஜிட்டல் தளங்கள், சேவைகளை அணுக முடியும். இது வங்கிச் சேவையை மேலும் எளிதில் அணுகக் கூடியதாகவும், உள்ளுணர்வு மிக்கதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதுடன், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி, நிதி உள்ளடக்கத்திற்கு ஆதரவளிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284989&reg=3&lang=1

(Release ID: 2284989)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2285113) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi