மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மொபைல் சாதன உற்பத்தித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
15 JUL 2026 3:26PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ. 62,500 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய மொபைல் சாதன உற்பத்தித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
உற்பத்தியை அதிகரிக்கவும், உள்நாட்டு மதிப்புகூட்டு நடைமுறைகளை வலுப்படுத்தவும், விநியோகச் நடைமுறைகளை உறுதிப்படுத்தவும், உலகளாவிய, போட்டித்தன்மையை மேம்படுத்தவும், மொபைல் சாதன உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத் துறையில் தற்சார்பு நிலையை அடைதல், பெரும் பொருளாதார மதிப்பை ஈட்டுதல், வடிவமைப்பு, ஆராய்ச்சி & மேம்பாடு ஆகியவற்றில், இந்திய காப்புரிமைகளை உருவாக்குதல் ஆகிய அம்சங்களையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். அதாவது 2026-27-ம் நிதியாண்டு முதல் 2030-31-ம் நிதியாண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தியாவில் மொபைல் சாதன உற்பத்திக்குத் தகுதியான விற்பனையின் அடிப்படையில், 2.25% முதல் 5% வரையிலான மாறுபட்ட விகிதங்களில் இத்திட்டம் ஊக்கத்தொகை ஆதரவை வழங்குகிறது. முக்கிய உதிரி பாகங்கள் அல்லது துணை பாகங்கள் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்வதற்கு, 1.5% வரை கூடுதல் ஊக்கத்தொகையையும் இத்திட்டம் வழங்குகிறது. இந்திய வர்த்தக முத்திரை உருவாக்குவதற்காக, தயாரிப்பின் வடிவமைப்பு, ஆராய்ச்சி & மேம்பாடு சார்ந்த தகுதியான விற்பனைக்கு 3% கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் காலத்தில், நாட்டில் ஒட்டுமொத்த மொபைல் உற்பத்தி ரூ. 39,00,000 கோடியை எட்டும் என்றும், மொபைல் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் 60,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், உலகளவிலான மின்னணுவியல் சாதன உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்குப் பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284792®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2285091)
आगंतुक पटल : 5