குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையின் 75-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் 'விதாயி கௌரவ் யாத்திரை'யின் நிறைவு விழாவில் குடியரசு துணைத் தலைவர் உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 15 JUL 2026 5:56PM by PIB Chennai

ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையின், 75-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'விதாயி கௌரவ் யாத்திரை' நிகழ்ச்சியின் (முன்னாள், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாநாடு) நிறைவு விழாவில், குடியரசு துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று உரையாற்றினார்.

ராஜஸ்தான் மக்களின் தியாகம், துணிச்சல், தேசபக்தி மிக்க பாரம்பரியம் குறித்து பெருமிதம் தெரிவித்த அவர், அம்மாநிலத்தின் ஒவ்வொரு தலைமுறையினரும், நாட்டின் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தியுள்ளனர் என்று கூறினார். அவையில் கண்ணியத்துடன் விவாதிப்பதும், மற்ற அனைத்துக் கருத்துகளையும் விட தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிப்பதும், ஜனநாயகத்தை செழிக்கச் செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம் என்ற போதிலும், மக்களுக்குச் சேவை செய்வது அதைவிட முக்கியதத்துவம் வாய்ந்தது என்று திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் கூறினார். தேர்தலில் வாக்குகள் மூலம் வெற்றி கிடைக்கும் என்றும், மக்களின் நீடித்த மரியாதையும், அன்பும் உண்மையான பொதுச் சேவையின் மூலம் பெறப்படுகின்றன என்றும் அவர் கூறினார். முன்னாள்,  தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் இந்தத் தனித்துவ முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், இத்தகைய கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், ஜனநாயக அமைப்பின் நினைவாற்றலைப் பாதுகாப்பதுடன், இளம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது முன்னோடிகளின் ஞானம், அனுபவத்திலிருந்து பயனடையவும் உதவுகின்றன என்று கூறினார். இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் திரு. வாசுதேவ் தேவநானிக்கு திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284992&reg=3&lang=1

(Release ID: 2284992)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2285083) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam