அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சுகாதார நலன் புதுமை கண்டுபிடிப்பில் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புக் கூட்டம் ஃபரிதாபாதில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 15 JUL 2026 11:08AM by PIB Chennai

சுகாதார நலன் புதுமை கண்டுபிடிப்பில் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புக் கூட்டம் ஃபரிதாபாதில் உள்ள என்சிஆர் உயிரித்தொழில்நுட்ப அறிவியல் தொகுப்பு வளாகத்தில்  நடைபெற்றது.   இக்கூட்டத்தில் முக்கிய உலகளாவிய சுகாதாரத்துறைத்  தலைவர்கள், உயிரித் தொழில்நுட்ப நிபுணர்கள், புத்தொழில்நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய சிறப்பு விருந்தினரும் பயோகான் செயல் தலைவருமான டாக்டர் கிரண் மஜூம்தார் ஷா, உலகளாவிய சுகாதாரத்துறையை மறுவடிவமைப்பதில் வலுவான தொழில்நுட்ப மாற்றங்களைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார். 21-ம் நூற்றாண்டு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் அதிக அளவில் செயற்கை நுண்ணறிவை சார்ந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.

உலகத் தரம் வாய்ந்த அறிவியல் நிறுவனங்களை இந்தியா உருவாக்கியிருந்த போதிலும் நமது சவால் அறிவியல் ரீதியாக இல்லாமல், அதை நடைமுறைப்படுத்துவதாக இருந்தது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284699&reg=3&lang=1   

***

SS/IR/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2285077) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi