ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கொல்கத்தாவில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக் கூட்டம்: மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் தலைமை தாங்கினார்
प्रविष्टि तिथि:
14 JUL 2026 6:35PM by PIB Chennai
மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், மேற்கு வங்க மாநில முதல்வர் திரு சுவேந்து அதிகாரி, மாநில அமைச்சர்களுடன் கொல்கத்தாவில் இன்று உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக 82,000 கோடி ரூபாய் மதிப்பிலான 19 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் போன்ற நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாநிலத்தில் கிராமங்களின் வளர்ச்சியை வலுப்படுத்த 8,508 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகளுக்கு இடைக்கால ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதுடன், பயனாளிகள் கணக்கெடுப்புக்கான காலக்கெடு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 295 கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு இந்தியாவின் விதை மையமாக மேற்கு வங்கத்தை மேம்படுத்தவும், பயிர் காப்பீடு, வேளாண் கடன் அட்டை வசதிகளை விரிவுபடுத்தவும் முகாம்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284576®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2284669)
आगंतुक पटल : 4