சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழந்தைப்பருவ தொற்றா நோய்கள் குறித்த ஊடகவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நிறைவடைந்தது

प्रविष्टि तिथि: 14 JUL 2026 3:33PM by PIB Chennai

யுனிசெஃப் இந்தியா, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் மேற்கு மண்டலம், நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய குழந்தைப்பருவ தொற்றா நோய்கள் குறித்த ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் இன்று நிறைவடைந்தது. மேற்கு இந்தியாவைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்ற இப்பயிலரங்கில், குழந்தைகளுக்கான தொற்றா நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், நல்வாழ்வு குறித்த செய்திகளை மேம்படுத்துதல் போன்ற அம்சங்கள் குறித்து நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது.

5 முதல் 19 வயது வரையிலான சிறுவர்கள், பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் உடல் பருமன், நீரிழிவு, மனநலப் பாதிப்புகள் போன்ற சவால்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. ஆதாரங்களுடன் கூடிய துல்லியமான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பொறுப்பு குறித்து அதிகாரிகள் வலியுறுத்தினர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284448&reg=3&lang=1

***

SS/PD/KR


(रिलीज़ आईडी: 2284503) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी