சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தகுதியுள்ள ஷெட்யூல்ட் வகுப்பினரிடையே தொழில்முனைவு, சுயதொழில் மற்றும் சமூக-பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதில் என்எஸ்எஃப்டிசி குறிப்பிடத்தக்க வெற்றி

प्रविष्टि तिथि: 13 JUL 2026 5:55PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய பட்டியலின பிரிவினர் நிதி மேம்பாட்டுக் கழகம்  (NSFDC), சலுகை அடிப்படையிலான கடன் திட்டங்கள் மூலம் தகுதியுள்ள ஷெட்யூல்டு வகுப்பினரிடையே தொழில்முனைவு, சுயதொழில் மற்றும் சமூகப் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டங்கள், நாடு முழுவதும் உள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட  பயனாளிகளின் சமூகப் பொருளாதார நிலைகளை மேம்படுத்தியுள்ளன.

2025-26 ஆம் நிதியாண்டில், 'மேம்பாடு சார்ந்த செயல்பாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் (DOORS)' என்ற முகமையால் மாதிரி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு ஆய்வு, வருவாய் அதிகரிப்பு, சொத்து உருவாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சமூக அந்தஸ்து மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சாதகமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் திரிபுரா ஆகிய பதினொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளில் என்எஸ்எஃப்டிசி-யின் கடன் சார்ந்த திட்டங்களின் கீழ் உதவி பெற்ற 5,480 பயனாளிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதிலும், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதிலும் என்எஸ்எஃப்டிசி-இன் கடன் திட்டங்கள் கொண்டுள்ள செயல்திறனை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284193&reg=3&lang=3

 ***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2284331) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Gujarati , English , Urdu