தேசிய மனித உரிமைகள் ஆணையம்
உஜ்ஜைனி: கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது தொழிலாளி உயிரிழப்பு - தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
प्रविष्टि तिथि:
13 JUL 2026 1:56PM by PIB Chennai
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில், கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது நச்சு வாயுவைச் சுவாசித்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர். ஜூலை 7ம் தேதியன்று , பைரவ்கர் சாலையில் உள்ள பிப்லி நகா பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவம் குறித்துத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், இது தீவிர மனித உரிமை மீறல் என்று கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்தியப் பிரதேச தலைமைச் செயலாளர் மற்றும் உஜ்ஜைனி காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கின் விசாரணை நிலை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த விவரங்களை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284048®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2284326)
आगंतुक पटल : 7