பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டோக்கியோவில் இந்தியா- ஜப்பான் பாதுகாப்புக் கொள்கை உரையாடல் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 13 JUL 2026 2:27PM by PIB Chennai

இந்தியா – ஜப்பான் இடையே 8-வது பாதுகாப்பு கொள்கை உரையாடல் 2026 ஜூலை 13 அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இந்தியக் குழுவிற்கு பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங்கும், ஜப்பான் குழுவிற்கு சர்வதேச விவகாரங்களுக்கான பாதுகாப்புத்துறை துணையமைச்சர் திரு கனோ கோஜியும் தலைமை தாங்கினார்கள்,  முந்தைய பாதுகாப்பு கொள்கை உரையாடல் நடைபெற்றது முதல், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில்  ஏற்பட்டுள்ள சிறப்பான முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பினரும் ஆய்வு செய்தனர். இந்தியா – ஜப்பான் உத்தி மற்றும் உலகாளவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதில் தங்களுடைய அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்கள்.

தற்போது நிலவும் பிராந்திய உலகளாவிய பாதுகாப்புச்  சூழல்கள் குறித்து இரு நாடுகளும் விரிவாக விவாதித்ததுடன்  பரஸ்பரம் நலன் சார்ந்த அம்சங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ராணுவங்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள், கூட்டுத் தலைமையகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்புப் பயிற்சிகள், திறன் மேம்பாடு, பாதுகாப்பு உபகரணம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள இருநாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்கள், வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான சந்திப்பு உட்பட எதிர்வரும் அமைச்சர்கள் பயணங்களுக்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284070&reg=3&lang=1  

***

SS/IR/KPG/SE


(रिलीज़ आईडी: 2284256) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati