பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு அசோக் குமார் லஹிரி பிரதமரைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 25 APR 2026 10:43PM by PIB Chennai

திரு அசோக் குமார் லஹிரி புது தில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். நித்தி ஆயோக்கின் துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டதற்கு திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். பொருளாதாரம், பொதுக் கொள்கை ஆகியவற்றில் திரு லஹிரிக்கு உள்ள ஆழ்ந்த அனுபவம், இந்தியாவின் சீர்திருத்தப் பயணத்தை கணிசமாக வலுப்படுத்தி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தேசத்தின் தொலைநோக்குப் பார்வையை எட்ட பங்களிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"திரு அசோக் குமார் லஹிரி நித்தி ஆயோக்கின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தேன். பொருளாதாரம், பொதுக் கொள்க ஆகியவற்றில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த அனுபவம், இந்தியாவின் சீர்திருத்தப் பயணத்தையும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தையும் பெரிதும் வலுப்படுத்தும். அவரது முயற்சிகள் நமது தேசத்தில் கொள்கை வகுப்பிற்கு மேலும் புத்துணர்ச்சி அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவரது பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய எனது நல்வாழ்த்துகள்."

***

(Release ID: 2255593)

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2284231) आगंतुक पटल : 35
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam