சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கான நலவாழ்வு நிகழ்ச்சிகள் ஜூலை 14-ல் நடைபெறவுள்ளது

प्रविष्टि तिथि: 13 JUL 2026 1:09PM by PIB Chennai

புதிய தேசிய சுகாதார சூழல் அமைப்புத் திட்டத்தின் 3-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, ஜூலை 14 அன்று சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் முக்கிய நிகழ்ச்சி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ரபீந்திரா சதன்னில் மாற்றுத்திறனாளி கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறும். அதே போல், நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதில் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர  குமார், இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே, மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்புப் பயிற்சி, உடல் பரிசோதனை முகாம்கள், அரசு சலுகைகளைக் கிடைக்கச் செய்தல், இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்களின் செயல்முறை விளக்கம், துப்புரவுப் பணியாளர்களின் பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டுதல் உள்ளிட்ட தூய்மைப்பணியாளர்களின் நலன்களை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284028&reg=3&lang=1   

***

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2284143) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Kannada , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam