எஃகுத்துறை அமைச்சகம்
இஸ்கோவின் விரிவாக்கம், நீர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், 84,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தைத் மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
12 JUL 2026 7:48PM by PIB Chennai
மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில் துறை அமைச்சர் திரு ஹெச் டி குமாரசாமி, மேற்கு வங்கத்திற்கான தனது மூன்று நாள் பயணத்தைத் தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக, இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் (செயில்) கீழ் இயங்கும் நாட்டின் மிகப் பழமையான, மிக முக்கியமான ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளில் ஒன்றான பர்ன்பூரில் உள்ள 'இஸ்கோ' எஃகு ஆலையில் அவர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் பொதுத்துறை எஃகுத் துறைச் சூழலியலை வலுப்படுத்துவதில் இந்திய அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்த ஆய்வின்போது ஆலை வளாகத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கத் திட்டங்கள், உற்பத்தி வசதிகள், உள்கட்டமைப்பு, நிலைத்தன்மைக்கான முன்முயற்சிகள், பணியாளர் நலன் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இஸ்கோவின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முக்கியத் திட்டங்களில் ஒன்றான சிஓபி-12 திட்டத்தைப் அமைச்சர் பார்வையிட்டார். இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மூத்த அதிகாரிகள் அவருக்கு விளக்கமளித்தனர். முக்கியமான விரிவாக்கத் திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவு செய்வது இந்தியாவின் எஃகு உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
"எஃகு உற்பத்தியில் உலகளாவிய வல்லரசாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணம், உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதை மட்டுமின்றி, நவீன, நிலையான, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட எஃகு ஆலைகளை அமைப்பதையும் சார்ந்துள்ளது. இன்று நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முக்கிய முதலீடும், தன்னிறைவு பெற்ற இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது," என்று திரு குமாரசாமி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283924®=3&lang=1
***
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2284126)
आगंतुक पटल : 6