அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
டி ஸ்பேஸ்-ஐப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் நிறுவன தகவல் தொகுப்பு குறித்த திறன் பயிற்சித் திட்டத்தை சிஎஸ்ஐஆர் - என்ஐஎஸ்சிபிஆர் வெற்றிகரமாக நிறைவு செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
11 JUL 2026 5:00PM by PIB Chennai
சிஎஸ்ஐஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான என்ஐஎஸ்சிபிஆர் (CSIR-NIScPR), ஒருங்கிணைந்த திறன் முன்முயற்சியின் மூன்றாவது கட்டத்தின் கீழ், " டிஸ்பேஸ் (DSpace)-ஐப் பயன்படுத்தி நிறுவனத் தகவல் களஞ்சியங்களில் செயற்கை நுண்ணறிவின் வடிவமைப்பு, மேம்பாடு, பயன்பாடு" என்ற தலைப்பில் ஐந்து நாள் நேரடித் திறன் பயிற்சித் திட்டத்தை 2026 ஜூலை 6 முதல் 10 வரை வெற்றிகரமாக நடத்தியது.
நிறுவனத்தின் பயிற்சிப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டம், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட திறந்த டிஸ்பேஸ் தளத்தைப் பயன்படுத்தி நிறுவனத் தகவல் களஞ்சியங்களை உருவாக்குவதிலும் நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்தியது. நூலகர்கள், தகவல் வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டிருந்தது.
சிஎஸ்ஐஆர் - என்ஐஎஸ்சிபிஆர்-ன் இயக்குநர் டாக்டர் கீதா வாணி ரசாயம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார். கல்விசார் தகவல்தொடர்பு, அறிவுப் பாதுகாப்பு, ஆய்வு ஆகியவற்றை மேம்படுத்துவதில் டிஜிட்டல் களஞ்சியங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
நாடு முழுவதிலுமிருந்து பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நூலகங்கள், பிற அமைப்புகளைச் சேர்ந்த மொத்தம் 25 பங்கேற்பாளர்கள் இந்தப் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283858®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2283929)
வருகையாளர் எண்ணிக்கை : 40