கூட்டுறவு அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, நாளை குஜராத்தின் தஹேகாமில் புதிய காய்கறி துணை வளாகத்தைத் திறந்து வைக்கிறார்
प्रविष्टि तिथि:
12 JUL 2026 4:08PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் “ கூட்டுறவின் மூலம் வளம்” என்ற தொலைநோக்குப் பார்வையுடன் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், நாட்டின் கூட்டுறவுத் துறையானது விவசாயிகளின் செழிப்பை உறுதி செய்தல், வேளாண் சந்தைப்படுத்தலை நவீனமயமாக்குதல், கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கித் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள தஹேகாமில், நாளை (2026 ஜூலை 13) நடைபெறும் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு எனப்படும் ஏபிஎம்சி-யின் (APMC) அமிர்த மகோத்சவத்தின் போது புதிய காய்கறி துணை வளாகத்தைத் திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், தஹேகாம் ஏபிஎம்சி தலைவர் திரு சுமேரு அமின், கூட்டுறவுப் பிரதிநிதிகள், ஏபிஎம்சி உறுப்பினர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியின் போது, மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, தாயின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்தின் கீழ் மரக்கன்று நடுவார்.
ஏபிஎம்சி-யின் அமிர்த மகோத்சவத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட நினைவு வெளியீட்டையும் திரு அமித் ஷா வெளியிடுவார். இந்நிகழ்ச்சியின் போது, அவர் தஹேகம் ஏபிஎம்சி வாரிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
***
(Release ID: 2283868)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2283909)
आगंतुक पटल : 11