சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினர் கலாச்சாரத் திருவிழாவின் 6-வது பதிப்பைத் தொடங்கி வைத்தார்; மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு
प्रविष्टि तिथि:
11 JUL 2026 7:53PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம், உத்தராகண்ட் அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ஃப் வாரிய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, டேராடூனில் சிறுபான்மையினர் கலாச்சாரத் திருவிழாவின் 6-வது பதிப்பை நடத்துகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவை, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கஜன் தாஸ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு கிரண் ரிஜிஜு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசு, மதம் அல்லது சமூகம் சார்ந்த பாகுபாடின்றி ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் வகையில் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற உணர்வுடன் செயல்பட்டு வருவதாகக் கூறினார். அரசு மக்களை மதத்தின் அடிப்படையில் பார்ப்பதில்லை, மாறாக ஒவ்வொரு குடிமகனையும் சமமாகவே நடத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த விழா, சிறுபான்மையினருக்கான விழா மட்டுமல்ல, மாறாக நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், நிலையான வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் நோக்கில் அனைத்து இந்தியர்களும் கொண்டாடும் ஒரு விழாவாகும் என்றும் அவர் கூறினார்.
கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் சந்தை அணுகல் ஆகியவற்றின் மூலம் சிறுபான்மை சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டில் அமைச்சகம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். ஒரு காலத்தில், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் கௌரவச் சின்னமாகக் கருதப்பட்டதாகவும், இன்று, மக்கள் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' பொருட்களைப் பெருமையுடன் தேர்ந்தெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மாறிவரும் மனநிலையின் பிரதிபலிப்பாக சிறுபான்மையினர் கலாச்சாரத் திருவிழா விளங்குவதாகவும், இது நமது வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடுவதுடன், நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283741®=3&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2283889)
आगंतुक पटल : 12